கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்.
விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள். இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் லட்சியம். இதனை எப்படி இலவசமாக நம் உலவியில் விளையாடுவது என்று பார்ப்போம்.

- இதற்க்கு உங்கள் கணினியில் கட்டாயம் கூகுள் குரோம் உலவியை நிறுவி இருக்க வேண்டும்.
- கணினியில் இல்லை என்றால் இந்த லிங்கில் சென்று Google Chrome லேட்டஸ்ட் குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- குரோம் உலவியை உங்கள் கணினியில் நிறுவியதும் அதை ஓபன் செய்து கொண்டு இந்த லிங்கில் https://chrome.google.com/webstore செல்லுங்கள்.
- தங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- அதில் உள்ள Install என்பதை க்ளிக் செய்தால் Angry Birds விளையாட்டு உங்கள் கணினியில் சேர்ந்து விடும்.
- இனி உங்கள் குரோம் உலவியில் Newtab க்ளிக் செய்தால் இந்த விளையாட்டு சேர்ந்து இருக்கும். அதில் க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் உலவியில் நீங்கள் இலவசமாக விளையாடி கொள்ளலாம்.
- இந்த லிங்கில் http://chrome.angrybirds.com/ க்ளிக் செய்தும் இதனை விளையாடி மகிழலாம்.
No comments:
Post a Comment