Friday, July 29, 2011

பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க


இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.
எண்கள்,பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters), மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு பாஸ்வேர்டை உருவாக்கினால் உங்கள் பாஸ்வேர்ட் யாராலும் கண்டறிய முடியாது. மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல பாஸ்வேர்டை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம். இது போல பாஸ்வேர்டை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இன்ஸ்டால் செய்யும் முறை:
  • டவுன்லோட் செய்த மென்பொருளை(.exe) இன்ஸ்டால் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும். அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும்.
  • அடுத்து வரும் கீழே இருப்பதை போல இரண்டு விண்டோ வரும் அதில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும்.

  • அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகி மென்பொருள் ஓபன் ஆகும். 
உபயோகிக்கும் முறை:
  • முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கான பாஸ்வேர்டை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த பாஸ்வேர்டை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் Password Length என்ற இடத்தில் உங்கள் பாஸ்வேர்ட் அளவை தேர்வு செய்து (குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை பாஸ்வேர்ட் வேண்டுமோ அதி தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும். 
  • அடுத்து உங்களுக்கான பாஸ்வேர்ட்கள் லிஸ்ட் வரும். 
  • இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த பாஸ்வேர்ட்கள். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் பாஸ்வேர்ட் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம்.
  • இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த பாஸ்வேர்ட் திரும்பவும் வாராது ஆகையால் நம்முடைய பாஸ்வேர்ட் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.
  • இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய பாஸ்வேர்டை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதானால் நாம் பாஸ்வேர்டை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.
  • இது போன்று நமது பாஸ்வேர்டை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கவும்.

உலகையே அசத்தி கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டு இலவசமாக

கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்.
விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள். இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் லட்சியம். இதனை எப்படி  இலவசமாக நம் உலவியில் விளையாடுவது என்று பார்ப்போம்.

  • இதற்க்கு உங்கள் கணினியில் கட்டாயம் கூகுள் குரோம் உலவியை நிறுவி இருக்க வேண்டும். 
  • கணினியில் இல்லை என்றால் இந்த லிங்கில் சென்று Google Chrome லேட்டஸ்ட் குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • குரோம் உலவியை உங்கள் கணினியில் நிறுவியதும் அதை ஓபன் செய்து கொண்டு இந்த லிங்கில் https://chrome.google.com/webstore செல்லுங்கள்.
  • தங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உள்ள Install என்பதை க்ளிக் செய்தால் Angry Birds விளையாட்டு உங்கள் கணினியில் சேர்ந்து விடும். 
  • இனி உங்கள் குரோம் உலவியில் Newtab க்ளிக் செய்தால் இந்த விளையாட்டு சேர்ந்து இருக்கும். அதில் க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் உலவியில் நீங்கள் இலவசமாக விளையாடி கொள்ளலாம்.
  • இந்த லிங்கில் http://chrome.angrybirds.com/ க்ளிக் செய்தும் இதனை விளையாடி மகிழலாம். 

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்


நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.

10. DOWNLOAD 3000 - RANK 4201
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/

9. SOFT32- RANK 3909
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/

8. DOWNLOAD ATOZ- RANK 2508
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/

7. DL 4 ALL-   RANK 1404
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.

6. FREE DOWNLOAD CENTER- RANK 1256
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/

5. ZDNET - RANK 1224
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/

4. FILE HIPPO -  RANK 688
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது.  இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/

3. SOFTPEDIA -  RANK 348
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/

2. BROTHER SOFT -  RANK 300
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.brothersoft.com/

1. CNET  -  RANK 159 
முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com

ஜிமெயிலில் இனி ZIP, RAR பைல்களையும் டவுன்லோட் செய்யாமல் ஆன்லைனிலேயே பார்க்கலாம்


கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை நிறுவனமான ஜிமெயிலில் வாசகர்களின் பயன்பாட்டிருக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே இருக்கின்றனர்.  நமக்கு யாரேனும் ஜிமெயிலில் போட்டோக்கள்(jpg,png,gif), டாகுமென்ட்(doc,xls,ppt) மற்றும் PDF பைல்களை அனுப்பினால் நாம் இந்த பைல்களை நம்முடைய கணினியில் டவுன்லோட் செய்து பின்னர் ஓபன் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் டாக்ஸ்(Google Docs) உதவியுடன் ஆன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நமக்கு வழங்கி உள்ளது. இதனால் நமக்கு டவுன்லோட் செய்யும் நேரம் குறைவதுடன் லிமிட்டட் இணைய இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் நமக்கு அனுப்பப்படும் பைல்களை கம்ப்ரெஸ்(.zip .rar) பைல்களாக இருந்தால் நம்மால் ஆன்லைனில் அந்த பைல்களை பார்க்க முடியாது டவுன்லோட் செய்து தான் பார்க்க முடியும். 
தற்பொழுது கூகுள் இந்த பிரச்சினையை தீர்க்க புதிய வசதியாக .Zip .Rar பைல்களை இனி டவுன்லோட் செய்யாமலே ஆன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியையும் வழங்கி உள்ளது. இதன்படி உங்களுக்கு Rar,zip பைல்களை யாரேனும் அனுப்பினால் அதை ஆன்லைனில் பார்க்க அந்த பைலுக்கு அருகில் உள்ள View என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கு அந்த Zip,rar பைல்களில் உள்ள அனைத்து பைல்களும் காட்டும் அதில் உங்களுக்கு தேவையானதை ஓபன் செய்து பார்த்து கொள்ளலாம். 


உங்களுக்கு அனுப்பிய .Zip,.Rar பைல்களுக்கு உள்ளே இன்னொரு Zip(or)Rar பைல்கள் இருந்தாலும் மேலே படத்தில் காட்டியுள்ளது போல் Actions என்பதை க்ளிக் செய்தால் இன்னொரு சிறிய விண்டோவில் வரும் View கொடுத்தால் அதனையும் பார்த்து கொள்ளலாம் இது போல எத்தனை Rar,Zip பைல்கள் இருந்தாலும் அதனை டவுன்லோட் செய்யாமலே பார்த்து கொள்ளலாம். 


இனி நாம் டவுன்லோட் செய்யாமல் நம்முடைய நேரத்தையும்,பணத்தையும் மிச்ச படுத்துவோம். கூடுதலாக மொபைலில் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த வசதியை அளித்துள்ளனர்.

ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் Group Chat செய்ய

இலவசமாக மெயில் சேவை வழங்கும்  நிறுவனங்களில் ஜிமெயில் முதல் இடத்தில் உள்ளது. ஜிமெயில் பல வசதிகள் வாசகர்களை கவர்ந்துள்ளது அதில் Chat எனப்படும் அரட்டை பகுதியும் ஒன்று. நம் நண்பர்களுடன் எளிதாக அரட்டை அடிக்கும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது.ஜிமெயிலில் ஒரு நண்பருடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு நண்பர் நமக்கு சாட்டில் அழைப்பார் இந்த நண்பர் நாம் ஏற்கனவே அரட்டை அடித்து கொண்டிருப்பவருக்கும் நண்பராக இருப்பார் அப்படியென்றால் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக அரட்டை அடிப்பதை தவிர்த்து ஒரே க்ரூப்பில் மூன்று பேரும் சேர்ந்து விட்டால் அனைவரும் ஒன்றாக அரட்டை அடிக்கலாம். இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மொபைலில் Conference call உள்ளதல்லாவா அதே தான் ஒரே நேரத்தில் பலருடன் பேசி மகிழலாம்.
இந்த வசதியை உபயோகபடுத்த 
  • இப்பொழுது நீங்கள் ஜிமெயிலில் யாருடனோ அரட்டையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். 
  • உங்களுக்கு இன்னொரு நபரை உங்கள் குரூப்பில் சேர்க்க வேண்டுமென்றால் உங்கள் சாட் விண்டோவில் மூன்றாவதாக உள்ள Group chat ஐக்கானை க்ளிக் செய்யுங்கள். 
  • அதை க்ளிக் செய்தவுடன் வரும் சிறிய கட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் மெயில் ஐடியை கொடுத்து  invite பட்டனை அழுத்தவும்.
  • நீங்கள் invite பட்டனை அழுத்தியவுடன் புதிய நண்பருக்கும் ஏற்க்கனவே அரட்டையில் இருப்பவருக்கும் அழைப்பிதழ் செல்லும் அதை இருவரும் ஏற்று கொண்டால் மூன்று பேரும் ஒன்றாக சேட்டிங்கில் ஈடுபடலாம். 
  • இன்னொரு நண்பரை சேர்க்க வேண்டும் என நினைத்தாலும் இதே முறையில் சேர்த்து அரட்டை அடிக்கலாம்