Thursday, June 30, 2011

இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள கணினிகளுக்கு - Opera11.11 latest version


இணையம் என்னும் கடலில் நீந்துவதற்கு நமக்கு பயன்படுவது இணைய உலவிகளாகும். இந்த இணைய உலவிகளில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது IE,Chrome,Firefox போன்ற உலவிகளாகும். இதற்க்கு அடுத்ததாக அனைவராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுவது Opera என்ற என்ற உலவியாகும். இந்த உலவியிலும் வசதிகள் மிக ஏராளம் குறிப்பாக இந்த பிரவுசரில் இணைய வேகம் மிகவும் பிரமாதமாக உள்ளது.  வேகம் குறைவான இணைய இணைப்பு வைத்து இருந்தாலும் இந்த உலவி மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தலாம்.
பயன்கள்:
  • நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Fastest Java Script engine கொண்டுள்ளது.
  • இணையத்தில் உலவும் போதும் நம் கணினிக்கு மிகவும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
  • டேப் வசதிகள் இதில் உள்ளது.
  • அட்ரஸ் பாரில் இருந்தே தேடும் வசதி.
  • குறைந்த இணைய இணைப்பு உள்ள கணினிகலளாலும் வேகமாக உலவ முடியும்.
  • ஹைலைட் செய்தால் நேரடியாக கூகுளில் தேடி கொள்ளும் வசதி.
  • HTML5 சப்போர்ட் செய்யும் உலவி.
  • பார்ப்பதற்கு அழகான தோற்றத்தோடு காணப்படும்.
  • எழுத்துப்பிழைகளை கண்டறியும் வசதி.
  • இப்படி மேலும் பல அறிய வசதிகள் இந்த உலவியில் உள்ளது. 

புத்தம் புதிய தமிழ் யுனிகோட் எழுதி மற்றும் கன்வெர்ட்டர்


 கணினியில் தமிழ் எழுத நாம் பல்வேறு முறைகளை பயன்படுத்துகிறோம். பிளாக், எடிட்டர், Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்தி தமிழில் எழுதி கொண்டிருக்கிறோம். இந்த முறையில் இன்னும் ஒரு புதிய தமிழ் UNICODE எழுதி அறிமுகப் படுதப்பட்டுள்ளது. இந்த எழுதியில் உள்ள சிறப்பம்சம் கன்வெர்டரும் இதில் உள்ளது உள்ளது. அதாவது பாமினி, அமுதம் போன்ற எழுத்துருக்களில் எழுதி அதை யுனிகோடாக மாற்றி கொள்ளும் வசதி இதில் உள்ளது.
  • இந்த வசதியை குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் பெறலாம்.
  • தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
  •  இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
  • இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

உதாரணமாக thaminglish தெரிவுசெய்து vaNakkam என தட்டச்சு செய்தால் "வணக்கம்" என இரண்டாம் பெட்டியுனுள் பெறமுடியும். அதேபோல் ஏணைய விசைப்பலகை அமைப்புகளில் ( பாமினி, அமுதம், தமிழ்நெட்99 ) தட்டச்சு செய்து பெற முடியும்.

இந்த நீட்சியை குரோமில் இணைக்க - Tamil Unicode Writter

Wednesday, June 29, 2011

கணினிக்கு அழகிய 500 எழுத்துருக்கள்(Fonts) ஒரே மென்பொருளில் இலவசமாக

கணினிக்கு இயங்குதளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம் இந்த எழுத்துருக்கள். கணினியில் எழுத்துருக்கள் இல்லாமல் கணினி இருப்பதால் எந்த பயனும் இல்லை. அதனாலே இயங்கு தளம் நிறுவும் போதே சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்கள் கணினியில் நிரந்தரமாகவே இருக்கும். ஆனால் டீபால்டாக வரும் எழுத்துருக்கள் மிகவும் குறைவே மற்றும் அதில் போட்டோசாப் டிசைன் போன்றவைகள் செய்ய இந்த வகை பல அழகிய எழுத்துருக்கள் இருந்தால் தான் நாம் வடிவமைக்கும் டிசைன் அழகாக காணப்படும். வேர்ட் தொகுப்பில் ஏதாவது டிசைன் செய்தாலும் விதவிதமான பாண்ட்கள் இருந்தால் அழகாக காணப்படும்.
அழகிய எழுத்துருக்கள் இணையத்தில் இலவசமாக கிடைத்தாலும்  அவைகளை ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்து நம் கணினியில் இணைக்கவேண்டும் ஆனால் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து விட்டால் சுமார் 500 பான்ட் வடிவங்கள் உங்கள் கணினியில் சேர்ந்து விடும். இந்த மென்பொருளில் ஏராளமான அழகிய எழுத்துருக்கள் அடங்கி உள்ளன. 

  • இந்த மென்பொருள் முற்றிலும் இலவச மென்பொருளாகும். 
  • இந்த மென்பொருள் வெறும் 11MB அளவே கொண்டுள்ளது.
  • XP/2003/2008/Vista/Win7 போன்ற இயங்கு தளங்களில் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஒருமுறை இன்ஸ்டால் செய்து விட்டாலே போதும் திரும்பவும் இதை இயக்க வேண்டிய அவசியமில்லை.
  • இந்த JD True Type Fonts மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும்.



மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை புதிய கண்டுபிடிப்புகள் பிரசுரிப்பு கிராமத்து வாத்தியாரின்

போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்து மொபைல்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.

ஏற்க்கனவே மின்சாரத்தை தவிர்த்து ரூபாய் நோட்டு, இலைகள், அரிசி மூலம் போடுவது போன்ற பல செய்திகள் நாம் படித்திருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே இதற்காக என்பதால் இந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன. ஆனால் இப்பொழுது ஜப்பானின் TES New Energy என்ற நிறுவனத்தால் Pan Energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த கருவி மூலம் மொபைலுக்கு சார்ஜ் போட மின்சாரம் தேவையில்லை வெப்பம் இருந்தாலே போதும். சூடான பொருட்கள் மீது இந்த கருவியை வைத்து மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கருவி வெப்ப ஆற்றலை நேரடியாக மின்ஆற்றலாக மாற்றி மொபைல்களுக்கு சார்ஜ் செய்கிறது. 

இந்த கருவி மூலம் செல்போன்கள், MP3 பிளேயர்ஸ், IPOD மற்றும் USB இணைப்பு இருக்கும் எல்லா கருவிகளுக்கும் சார்ஜ் போட முடியும் என்பது இதன் கூடுதல் வசதியாகும். இந்த கருவி ஏற்கனவே ஜப்பானில் விலைக்கு வந்தாச்சு. ஆனால் இதன் விலை $299 (Rs. 13,750) மிக அதிகமாக இருப்பதால் இந்த கருவியின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிறுவனம் விலையில் மாற்றம் செய்தால் உலகம் முழுவதும் வீணாக்கப்படும் மின்சாரத்தை சேமிக்கலாம். 

மின்சாரம் இல்லாமல் சார்ஜ் போட Pan Energy என்ற கருவி மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. Yogen என்ற கருவியும் உள்ளது. இந்த கருவி மூலமும் மின்சாரம் இல்லாமல் 5 அல்லது 10 நிமிடத்தில் நம் பொங்கலுக்கு சார்ஜ் போட்டு விடலாம் இதன் விலை $45 (Rs. 2000)

ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக youtub இல் இருந்து தவிர்ப்பதற்கு




இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ளன.

youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது.


முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்கு செல்லுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு youtube தளம் வந்து இருக்கும். அதில் நீங்கள் கீழ் பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கு Safety mode : Off என்று லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.


இந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
இதில் நீங்கள் On என்பதை க்ளிக் செய்து Save கொடுத்து விடுங்கள்.



அவ்வளவு தான் youtube ல் ஆபாச வீடியோக்கள் முற்றிலுமாக தவிர்க்க பட்டுவிட்டது.
இதை உறுதி செய்ய நீங்கள் ஏதேனும் கொடுத்து தேடி பாருங்கள் No videos found என்ற செய்தியே வரும்.

Sunday, June 26, 2011

புதுப்பொலிவுடன் வந்தாச்சு பயர்பாக்ஸ் 5 டவுன்லோட் செய்ய


நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது இந்த பிரவுசர்களாகும். இணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். இதில் பயர்பாக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணினி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில் உள்ளது. இல்லை என்றால் பயர்பாக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும். 

சமீபத்தில் தான் மாதம் தான் பயர்பாக்ஸ் 4.1 வெளியிடப்பட்டு இணைய டவுன்லோடில் சாதனை நிகழ்த்தியது. இதுவரை இந்த பயர்பாக்ஸ் உலவியை கோடிகணக்கான பேர் டவுன்லோட் செய்து உள்ளனர். வெளியிட்ட குறைந்த நாட்களிலேயே இவ்வளவு பேர் டவுன்லோட் செய்த இந்த மென்பொருள் தற்போது மேலும் பல வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பான பயர்பாக்ஸ் 5 வெளியிட்டுள்ளது. 


மேம்படுத்தப்பட்ட வசதிகள்:
  • CSS அனிமேசன் படங்களுக்கு சப்போர்ட் செய்கிறது.
  • JavaSript மற்றும் நெட்வொர்கிங் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • HTML5, MathML, XHR,SMIL போன்ற இணைய பைல்களுக்கு நன்றாக சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கு புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும்.
  • மேலும் பல வசதிகள் நிறைந்து காணப்படுகின்றன.
கீழே உள்ள இணைப்புகளில் சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் கணினிகளுக்கு(English) - Download
லினக்ஸ் கணினிகளுக்கு(English) - Download
Mac கணினிகளுக்கு             (English)Download 

Thursday, June 23, 2011

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.



இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.

2010ல் உலகில் அதிக கணினிகளில் தடை செய்யப்பட்ட பத்து இணைய தளங்கள்

This summary is not available. Please click here to view the post.

சுலபமாக உங்கள் கணினியின் விவரங்களை அறிய


கணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவதற்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.  
ஆகவே நம் கணினி பழுதானால் சர்வீஸ் இன்ஜினியர் என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிட்டு அவன் கேட்கிற தொகையை கொடுத்துடுவோம். அவனும் இது தாண்டா சேன்ஸ் என்று நெனச்சி இஸ்டதிர்க்கும் ஏதாவது பொய் சொல்லி காசை கறந்து விடுவான். ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணினியை பற்றி சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு சூப்பர் இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருளினால் கணினியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம். 
  • இந்த மென்பொருளில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
  • பிரிண்ட் எடுத்தல், ஈமெயில் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது.
  • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக இயக்கலாம்.
  • இதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும். 
  • இந்த மென்பொருள் 1.04MB அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
  • இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று SimpleSys Info 2.8 உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • டவுன்லோட் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள். 
  • உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் வரும். 
  • அந்த விண்டோவில் சுமார் 10 க்கும் டேப்கள் இருக்கும் அதில் ஒவ்வொன்றாக க்ளிக் செய்து உங்களுடைய கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்